விருத்த முனிவர்களுக்கு பகவான் கரிய மேகங்களிலிருந்து காட்சியளித்ததால் இந்த ஸ்தலம் 'திருக்கார்வானம்' என்ற பெயர் பெற்றதாகக் கூறப்படுகிறது.
மூலவர் கார்வானர் என்னும் திருநாமத்துடன் ஸ்ரீதேவி, பூதேவியுடன் நின்ற திருக்கோலம், வடக்கே திருமுக மண்டலத்துடன் ஸேவை சாதிக்கின்றார். தாயாருக்கு கமலவல்லி என்னும் திருநாமம். தாயார் சன்னதி தற்போது இல்லை. கௌரிக்கு (பார்வதி) பகவான் பிரத்யக்ஷம்.
திருமங்கையாழ்வார் 1 பாசுரம் பாடியுள்ளார். இக்கோயில் காலை 7 மணி முதல் மதியம் 12 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கும்.
|